கவிதை
களவும் கற்றல்
மஹேஷ் குமார்
நான் யார்?
ஐஸ்வர்யா துர்கா
தேடல்
கோ.கண்ணன்
சிறுகதை
ஒரு தராசும் சில படி கல்லும்...
ஆதித்யன்
நீ வேணாம்டா செல்லம்!
ரமா சுரேஷ்
தேடல்
மதிக்குமார் தாயுமானவன்
கட்டுரை
புத்தருடன் சில தேனீர்கள்
நா.பாலா
சென்னைப் பயணம் பற்றி இதயம் பேசுகிறது!
கீழை அ.கதிர்வேல்
சிங்கப்பூர் சமூகம்
சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வியும், ரெவரண்ட் பாக்கியநாதனும்
செ.ப.பன்னீர் செல்வம்
நேர்காணல்: எழுத்தாளர் மாதங்கி
தங்கமீன் வாசகர் வட்டம்
பாரதியார் - பாரதிதாசன் விழா 2013
ஐஸ்வர்யா துர்கா
தொடர்கதை
ஆ! (அமானுஷ்யக் கதைகள் - 1)
சூர்ய ரத்னா
எட்டாம் கடல்
ஆதித்யன்
இளமைப் பக்கம்
நாம் மாற வேண்டும்!
ஐஸ்வர்யா துர்கா
மலேசியா
நூல் பார்வை: அவளுடைய இரவென்று எதுவுமில்லை!
பாலு மணிமாறன்
ஒரு நாள் ஒரு கடவுள்
ஜாசின் தேவராஜன்
வாசகர் வட்டம்
தங்கமீன் வாசகர் வட்டத்தின் 17 ஆவது சந்திப்பு
தங்கமீன் வாசகர் வட்டம்
நான் - நூல் அறிமுக விழா
எலிசபெத்
ஆகஸ்ட் மாதச் சிறுகதைகள் – ஒரு பார்வை
எம்.சேகர்
கேமராக் கண்
தீபா சாரதி புகைப்படங்கள்
கருத்துக்களம்
இளையர்களை ஈர்ப்பது எப்படி?
அகிலா அகி
வசந்தம், வசந்தம்!
எலிசபெத்
நூல் அறிமுகம்
அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும்
பாலு மணிமாறன்
சிலிக்கான் இதயம்
இராம கண்ணபிரான்
ஏழாவது குத்தம்
கோ.புண்ணியவான்
Skip Navigation Links
Skip Navigation Links

உலகம் சுற்றும் பாட்டி!- . முத்துலிங்கம்   

(படம் ; வடகரை வேலன்)

            என் பாட்டியின் வலது ஆள்காட்டி விரல் நகமும், சதையும் இணைந்து பக்கவாட்டில் பார்க்க ஒரு குட்டிக் கழுக்கின் மூக்கைப் போல் இருக்கும். நான் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவளின் கழுகு தன் அலகால் என் மண்டையில் ஏதோ புதையல் ரகசியத்தை வரைபடமாகத் தீட்டிக் கொண்டே இருக்கும். பன்னீர் வெற்றிலையும், சுகந்த பாக்கும் மணக்கும். முற்றத்தில்  தெரியும் நட்சத்திரங்களிலிருந்து 'திடும்' என ஒன்று உயிர் பெற்று,நேர்க்கோட்டில் ஊர்ந்து மறையும். சிவப்பும், நீலமும் ஒளிரும் ஒளிப் போட்டுகள் தலைக்கு மேலாக  நீந்தி வருகையில் ஒலிபெற்று ஹம்மிங்காகி, கவனிக்க முற்படுகையிலேயே 'டுர்ரென' சுருதி மாறி விலகி மறுபடி விண்மீன்களிடையே காணாமல் ஆகும். தென்னங்கீற்றுகள் சட்டெனக் கூட்டமாய் தியான வகுப்பின் இடைவேளைக்குப் பேசிக்கொள்வதைப்போல,அவசரமாய்ப் பேசி மாய்ந்து  மௌனிக்கும். “ஹும்!  அப்புறம் சொல்லுங்க பாட்டி!”- என்பேன், அவள் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள் எனில், என் தலையில் எங்காவது ஒரு இடத்தில் கழுகு இளைப்பாறிக்கொண்டு இருக்கும். “ அப்புறம் அந்த இளவரசன் அந்த மரக்குதிரையில் டக்கென ஏறி உட்கார்ந்தான்! அதன் சோத்துப் பக்க காதைத் திருக்கினான்...” நான் கொஞ்சமாக பின் பக்கம் நெம்ம்பி அண்ணார்ந்து அவள் முகத்தைப் பார்ப்பேன், “எப்படி?” "இப்படித்தான்"- என  என் காது மடலை திருக்கிக் காட்டுவாள். சாப்பிட்டோ, சாப்பிடாமலோ வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில்  உறங்கிப் போயிருப்பேன்.குதிரை ஜிவ்வெனக் கிளம்பி மேகங்களிடையே அலைந்து திரியும், அதன் நண்பனாய் நானும்...என் கனவுகளிளேயே அக்குதிரை வளர்ந்து குட்டியும் ஈன்றது....  

            பாட்டி ஒன்றும் சட்டென என் வாழ்வில் காணாமல் போகவில்லை...

பள்ளிக்கூடத்தை விட வேண்டுமானால், நானும் என் தோழர்களும் அவசரமாய் வளர்ந்து பெரியவர்களாக வேண்டியிருந்தது.பாட்டியும் என் தங்கையும் எதையாவது செய்து கொண்டிருக்க, நான் அவளைப் புறக்கணித்து, வேகமாய் வளர்ந்து,பெரியவர்களின் உலகத்தில் சுதந்திர புருஷனாய் வளர்ந்து  விட எண்ணினேன். அப்புறம் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு போகலாம், புகை வளையங்களை விடலாம், தேர்வுகள் பரீட்சைகள் இல்லாத உலகிலே நண்பர்களுடன் சுற்றி விட்டு எவ்வளவு நேரம் கழித்தேனும் வரலாம், பாக்கட்டில் கையை விட்டுப் பணத்தை எடுத்து  வேண்டிய மட்டும் செலவு செய்யலாம்! எங்களின் கணக்கில் எங்கோ தவறு, எவ்வளவு முயற்சித்தும் கேவலம் ஒரு நாளைக்கு ஒரு இன்ச் கூட வளர இயலவில்லை. அதனால் எங்களின் அடுத்த இலக்கான மீசை வளர்ப்பிற்கு கவனத்தைத் திருப்ப வேண்டியதாயிற்று.எங்களால் கைவிடப்பட்டு, தன்னந்தனியாளாய் ஆன பின்பு,  வெகு காலத்திற்குப் பின்னரே  மரித்துப் போனாள்.

            என்னை அறியாமலே பாட்டி எனக்குத் தந்த கருவியை நான் இது நாள் வரை உபயோகித்துக் கொண்டு இருக்கிறேன்!கற்பனை. கண்ணை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் கனவு காண்பது! இப்போது அது குறித்து எனக்கு அவமானமில்லை.ஆனால் அப்போது தெரியவந்திருந்தால், அவமானம் பிடுங்கித் தின்றிருக்கும்! “ இதோ மீசை வளர்ந்தே விட்டது...நாளைக்குப் புஷ்டியாய் வளர்ந்து விடும். பின்னர் ரகசியமாய் அப்பாவின் பிளேட் எடுத்து ஷேவ் செய்துக் கொள்வேன்" என நான் கணக்கிட்டதெல்லாம் வெறும் கற்பனைதான் என்று தெரிந்தால் அவமானம் அடையாமல் என்ன செய்வதாம்? அதுவும் பாக்கு இடித்து கையை நசுக்கிக் கொண்ட ஒரு பழங்காலத்துப் பாட்டியின் அளவீடுகளை  உபயோகித்துப் பெருமிதம் கொண்டிருந்தேன் என்பது எவ்வளவு பயங்கரமானது!  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்வதற்குப் பதிலாக தேய்ந்து சிறுபிள்ளைத்தனமான விடலையாய்ப் போவதற்குச் சமமானது அது. நல்லவேளை அதெல்லாம் என் கற்பனை என எனக்கு (எனக்கு மட்டும்தான்!) அப்போதே தெரியவில்லை.

            பாட்டியின் இடத்தை அவளின் வாரிசுகளால் பிடிக்க முடியவில்லை. கதைகளைத் தொலைத்த சமூகத்தின் பிரதிநிதி,என் அப்பா. மலைப் பாதையில் கார் சேஸ் எனத் துவங்கும் அப்பாவின் 007  கதை! சாகசமான துரத்தல்களுக்குப் பின்னர் இம்பாலா காரிலிருந்து  நீளும் ஒரு வேல், எதிரியின் கார் டயரைக் கிழிப்பது சுவாராயமானதுதான்

என்றாலும், ஒரிஜினல் கதையில் வரும் பிகினிப் பெண்களை எப்படி  உருமாற்றுவது என்னும் மெகாப் பிரச்சனையில் சிக்கி,கதை   ஐந்து நிமிடக் கதையாய்ச்  சுருங்கிப் போய் விடும். . அம்மாவோ பாவம், கரண்டியால் அடிப்பது, தலையில்'னங்'-கெனக் குட்டுவது போன்ற எளிய வேலைகளைத் தவிர வேறேதும் தெரியாத வெகுளி! தான் உண்டு தன் வேலை உண்டென வாழ்பவள்.

@  @   @

            பாட்டிகள் காணாமல் போனபின்னர், மாமாக்களும், அத்தைகளும், சித்தி-சித்தப்பாக்களும் இல்லாமல் ஆனார்கள்.பண்டிகைகளும், கொண்டாட்டங்களும்  வெறும் தொலைக்காட்சி முன் செலவிடும்   விடுமுறை நாட்களாயின, பின்னர் அப்பாக்களும், அம்மாக்களும்,  நேரம் இல்லாதவர்களாய் ஆயினர் பின்னர் அவர்கள் ஒன்றாக வாழமுடியாதவர்களாகவும் ஆயினர். இவை எல்லாமும் சேர்ந்து நாமும் நேரமில்லாதவர்களாகவும், நம்மோடு நாமே  ஒன்றாகச் சேர்ந்து இருக்க இயலாதவர்களாகவும், பிளவு பட்ட நம்மை என்ன செய்வதென தெரியாதவர்களாகவும், மாறிக்கொண்டு இருக்கிறோமா என்ன?

 @   @    @

             சமீபத்தில் Rhonda Byrne யின் 'The Secret “ என்ற ஒரு புத்தகத்தை வாசித்தேன், பின்னர் அதே பெயரில் அவர்களின் குழு தயாரித்த ஒரு DVDயையும் பார்த்தேன். அதில் ஒரு முக்கியமான விஷயம் என்னைக் கவர்ந்தது. நேர்மறையான சிந்தனை,நேர்மறையான விளைவுகளை உருவாக்கும், எதிர்மறையான சிந்தனைகள் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்பதே அடிப்படைக்கருத்து. (இது நம் கலாச்சாரத்தில் ஏற்கனவே சொல்லி வருவதுதான் - வாழ்க வளமுடன்!, மனம் போல் வாழ்வு!, ஓம் தத் சத் போன்றவை...) வார்த்தைகளை நீங்கள் நேர்மறையாகப் பயன்படுத்தினாலும் உங்களின் உணர்வுகளும்,சக்தியின் வெளிப்பாடுகளும்  எதிர்மறையை நோக்கியதாக இருக்குமானால் எதிர்மறையான விளைவுகளையே விளைவிக்கும் என்பது  ஒரு முக்கியமான புரிதல், அதாவது இதன்படி  War against Poverty, War against Corruption, War against Terrerism மேலும் அதிகப்படியாக இத்தகைய விஷயங்களை உருப்பெறச்செய்யும் என்பது இவர்களின் வாதம். தீமையை நன்மையாலேயே வெல்லவேண்டும் என்ற புத்தரின் வாக்கைப் போல.  அப்படியாயின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு எது தீர்வாக முடியும்? 

 @   @   @

             கற்பனை, உங்களுக்குள் இருக்கும் சிறுவனை மலர்த்துகிறது ! அவன்;- உங்களின் வாழ்வை நீங்கள் கொண்டாடவும்,உணர்ச்சிகளைத் தீவிரத்துடன் அணுகவும், உலகினை விளையாட்டாய்க் காணவும், கற்றுத் தருவான். உங்கள் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் என்ற வரிசையை அவனை வைத்து நிர்ணயித்துக் கொள்வது உங்களின் வாழ்வினை வளமாக்கும்.

            இரண்டாவதாகக் கற்பனை நீங்கள் மற்றவராகவோ, அல்லது மற்றொன்றாகவோ மாற வாய்ப்பளிக்கிறது. உங்களின் அண்டை வீட்டுக்காரராக வாழ்ந்து பாருங்கள். நீங்கள் அவர்களை நேசிக்கத்துவங்குவீர்கள். பைபிள் சொல்வதும் அதைத் தானே! உயிர்களிடத்தே பரிவு கொள்ளும் பெருமக்கள் எல்லா உயிர்களிடத்தும் தன்னையே உணர்வதும், தன்னிலே   எல்லா உயிர்களையும் அணைத்துக் கொள்வதும்தானே நிகழ்கிறது.

இக் கூற்றைப் பரிசீலித்துப் பாருங்களேன்.

 @   @    @

            .முத்துலிங்கத்தின் கதைவெளி,  வினோதங்களின் கலவை, நவீன மனிதனிடம் வறண்டு போயுள்ள  கற்பனையைத் தூண்டி அவனை

எளிமையானவனாகவும், இளமையானவனாகவும் ஆக்கும் வல்லமை கொண்டது.  கபடற்ற இதயத்துடன் வாழ்வினை நோக்க விழைவு கொண்டது.  நேர்மறையாக உலகை அணுகுவதுடன் ஒரு குழந்தைத்தனமான சிரிப்பைத் தக்கவைத்துக் கொள்வதும் ஆகும்.

             அவரின் புனைவு மொழி சிறப்பானது. அதில் எளிய இலங்கைத் தமிழரின் இயல்பான மொழியும், சொலவடைகளும்,பழம்பாடல்களும் நிரம்பியிருக்க, அவை விரித்து போகும் மனிதர்கள் உலகின் பல இனத்தவராகவும், நிறத்தவராகவும், மொழி கலாச்சார பின்புலங்கள்  கொண்டவர்களாகவும், இருப்பதுவும், மிகப் பழம் மொழி கொண்டு, மிக முன்னேறிய, அல்லது மிகவும் பின் தங்கிய, வாழ்வினை ஒரு வித  வியப்பும், சமநிலையும் கொண்டு கவனிக்க முயல்வதுவும் ஆகும். நாம் பார்த்தேயிராத  நாடுகளும், மக்களும், அவர்களின் விசித்திரமான பழக்கங்களும், நாம் அதிகம் புழங்கியிராத மொழியில் சொல்லப்படுகையில், நாம் ஒரே சமயத்தில் புதுப்புது உலகங்களைக் கண்டு வியக்கவும், அதே தருணத்தில் உலகமெங்கும் மனிதர்கள் ஒன்றுதான்   என்ற முடிவுக்கும் வருகிறோம். எதிர் எதிர் முரண்கள் இயல்பாகப் போருந்திக் கொள்ளும் நாடகத்தை வியக்கிறோம். இது கணியன் பூங்குன்றானாரின் "யாதும் ஊரே - யாவரும் கேளிர்" தரிசனத்திற்கு நெருங்கியது.

     கி.ராஜ நாராயணனைப் போன்றே அ.மு வும் ஒரு கதை சொல்லி,  வண்ணதாசனைப் போன்றே நுணுக்கமானவர்.வாசிப்பின் வழியே  இயல்பாகவே நாம் பராக்கு பார்க்கவும், கற்பனை செய்யவும், கனவுகாணவும் துவங்கி விடுகிறோம்.பிள்ளை பிராயத்திலிருந்தே "சிறகுகளைக் கணக்காக பயன்படுத்த" விழையும் இப்போதைய அவசர உலகத்தில், பராக்கு பார்க்கச் சொல்லித் தருபவர் ஒரு கலைஞனும் , அத்யாவசியமானவனும் ஆவார்.

@ @ @

           வலை உலகத்தில்  இவரது கதைகள் தாராளமாக வாசிக்கக் கிடைக்கின்றன. ஒலிப் புத்தகங்களாகவும், PDFகோப்புகளாகத் தரவிறக்கம் செய்யவும் கிடைக்கின்றன. ' திண்ணை' போன்ற இணைய இதழ்களிலும், வலைப்பூக்களிலும் வாசிக்கலாம். இவரது வலைப்பூ http://www.amuttu.com.


            .முத்துலிங்கம் அறுபதுகளில் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள்,நாவல் என்று தொடர்கிறது, அவரது பயணம்.                                                     

இதுவரை வெளிவந்த நூல்கள் :

1.     அக்கா - 1964

2.     திகடசக்கரம் - 1995

3.     வம்சவிருத்தி - 1996

4.     வடக்குவீதி - 1998

5.     மகாராஜாவின் ரயில்வண்டி - 2001

6.     .முத்துலிங்கம் கதைகள் - 2004

7.     அங்கே இப்ப என்ன நேரம் ? - 2005

8.     வியத்தலும் இலமே - 2006

9.     கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - 2006

10.  பூமியின் பாதி வயது - 2007

11.  உண்மை கலந்த நாட்குறிப்புகள் - 2008

12.  Inauspicious Times - 2008

@  @  @

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : thangameen@hotmail.com
Tagged :
2 comments:
முருகேஷ் said...
வாழ்க்கை, புத்தகங்கள், எழுத்தாளர்கள் என்று பலவற்றையும் பற்றி எழுதி இருக்கும் ரமேஷ் சுப்பிரமணியத்தின் திறன் பாராட்டுக்கு உரியது. இன்னும் பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
Priya Velu said...
//பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் வெறும் தொலைக்காட்சி முன் செலவிடும் விடுமுறை நாட்களாயின,//Well said sir. How true!
தங்களது கருத்தை இங்கே பதியவும்
Name:  
Email:    
Comments:
 
Eg. Type in English 'Amma' to get in Tamil 'அம்மா'. Press CTRL + G to toggle between English and Tamil
CopyRight 2010 © Goldfish Publications